'வெட்டாதீர்கள்' என்கிறது 'மரம்'; 'வெட்டுங்கள்' என்கிறது 'குளம்'…..

Must read

நெட்டிசன் 

குட்டி குட்டி விஷயங்கள் தொட்டு மனதோடு விளையாடும்
not-cut


 வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது *”மரம்….”*

வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது *”குளம்………..”*

கல்வி கற்க புத்தகங்களை விட *நோட்டுக்களே*அதிகம் தேவைப்படுகின்றன.!
Money மட்டுமே மதிக்கப்படுகிறது… *மனிதம்*பலரால் மிதிக்கப்படுகிறது..
பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…
ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..
லாரியில அழுது கொண்டே சென்றது….. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!
pond
நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..
பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!
காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.
திருக்குறளை… வாழறதுக்காக படிச்சவங்கள விட..! “ரெண்டு மார்க்” வாங்குறதுக்காக படிச்சவங்க’தான் அதிக பேரு..!
அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு  *பல தோல்விகளும்,* *சில துரோகிகளும்* தேவை!!
நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..!  எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!
எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை  உண்டு…!!
எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!!
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.
கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!
பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!
தோசைகளின் எண்ணிக்கையை *சட்னியின் தரமே* தீர்மானிக்கிறது.
நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம்.
உணர்ந்தவன் உயர்வான்!!
(வாட்ஸ்அப் பதிவு)

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article