கொவை:
டந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளதாக  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இருந்தாலும் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெற்றிகரமாக தடுக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் , சேலம் போன்ற சில மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருமாறி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் கடந்த 2 வாரமாக  புதிதாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில்  இதுவரை  146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், ஒருவர்  மட்டுமே பலியான நிலையில், மீதம் இருந்த 145 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். இறுதியாக  கர்ப்பிணிப் பெண் ஒருவர் மட்டுமே சிகிச்சை முடிந்து,  (13/05/2020) காலை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக கோவை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பரவல் இல்லாத நிலையில்,   கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர்  வேலுமணி, கோவையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று இல்லாததால் அம்மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.