சேலம்:
21 நாட்களாக கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில், சேலம் மாநகராட்சி பகுதி  பச்சை மண்டலமாக மாறும் சூழல் உருவாகி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 35 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 30 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு கடந்த  21 நாட்களாக புதியதாக யாரும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்படாததைத் தொடர்ந்து, விரைவில்  பச்சை மண்டலமாக சேலம் மாநகராட்சி மாறும் என நம்பப்படுகிறது.
மேலும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் இதுவரை 3,077 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.