Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்… காங்கிரஸ் அதிரடி

Jul 17, 2020

திருவனந்தபுரம்:

அரபு தூதரகம் பெயரில் நடைபெற்ற தங்கக்கடத்தல் விவகாரம் கேரளாவில் அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் முக்கிய அரசு அதிகாரிகள் உள்பட ஆட்சியாளர்கள் பலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு  அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

கேரளாவில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள  30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தல் விவகாரத்தில், முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சவுமியா, ரமீஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சபாநாயகர் ராமகிருஷ்ணன் மீதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால்,  காங்கிரஸ், முஸ்லிம் லீக், பாரதியஜயதான உள்பட எதிர்க்கட்சிகள் கேரள அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கேரள மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Kerala Gold Smuggling , கேரள தங்க கடத்தல், நம்பிக்கையில்லா தீர்மானம், பினராயி விஜயன்,

Post navigation

கெலாட் அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் பேரம்..? காங். வெளியிட்ட தொலைபேசி உரையாடல்
'கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலிக்கு தடை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer