சென்னை:

மமுக தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்து வருவதாக  மாநில தேர்தல் கமிஷன்மீது டிடிவி குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊரகப்பகுதிகளில் வரும்  27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  9ந்தேதி முதல் தொடங்கி உள்ளது.  வரும் 16 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாளாகும். வரும் 27 மற்றும் 30 ஆம தேதிகளில்  இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்த்ருந்தது.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரனின் அமமுக இந்திய தேர்தல் ஆணையத்தில், அரசியல் கட்சியாக  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தங்களது கட்சிக்கு பொதுவான தனிச்சின்னம் வழங்க வேண்டும் என்று கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், மாநில தேர்தல் ஆணையம்,  டிடிவி தினகரனின் அமமுகவுக்கு இந்த தேர்தலில்  தனிச்சின்னம் வழங்க  மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல்  தெரிவித்துள்ளார்.  இதனால், அமமுக தேர்தலில் போட்டியிடுவதில் அதிருப்தி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலான கட்சிகளுக்கு … பொது சின்னம் வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.