சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை: சுப்ரமணியன் சுவாமி பல்டி

திமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக வாய்ப்பே இல்லை என, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா, முதல்வராக பதவியேற்கும் பணிகளை அதிமுக வட்டாரங்கள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. அதே நேரம் மத்திய அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே இந்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, ‘’சசிகலா முதல்வ ராக வாய்ப்பே இல்லை. அவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக, ஜாதகத்தில் கூறியிருந்தால் அது தவறான கணிப்பு.

சசிகலா பற்றி கூறப்படும் கணிப்புகள் தவறாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன; பிப்ரவரி 9ம் தேதிக்குப் பின்னர்  இதன் முழுவிவரம் தெரியவரும்,’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரு நாட்களுக்கு முன்புதான், “, ‘சட்டப்படிதான் சசிகலா முதல்வர் ஆகவுள்ளார். சசிகலா முதல்வர் பதவி ஏற்பதை சட்டப்படி தவறு என்று யாராலும் இதுவரை கூற முடியவில்லை.” என்று தெரிவித்தார்.

இப்போது திடுமென எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். அவரது நிலைபாடு மாறியதற்குக் காரணம் தெரியவில்லை.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: No Chance to Sasikala as CM: Subramanian Swamy backtrack, சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை: சுப்ரமணியன் சுவாமி பல்டி
-=-