சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்றும்,  இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றும் பாஜக மூத்த தலைவர்  இல.கணேசன் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று சென்னையில், திமுக தலைமையில் கூட்டணி கட்சியின் பிரமாண்டமான கண்டனப் பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில்,இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்,  அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியவர்,  பாதிப்பு இல்லாத மக்களுக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள் என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தவர், மக்கள் நலன் தீர்மானத்தை விளக்கி கொள்ள மாட்டோம் என்றும்,  இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான தீர்வுகள் கிடைக்கும். எதிர்கட்சியினர் போராட்டம் நீர்த்து போகும் என்றும் கூறினார்.

மேலும், ஜார்கண்ட் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்கு, ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக தோற்றாலும், வாக்கு சதவீதத்தில் முன்னிலையில் உள்ளது என்று கூறி சமாளித்தார்.