சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்று 3வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

4ஆண்டுகளுக்கு பிறகு, மே 15ந்தேதி முதன்முறையாக பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ரூ3 உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து,இன்று 3வது முறையாக பெட்ரோல் 87 பைசா, டீசல் 91 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால், அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அதன்படி, கடந்த பத்து நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 91 பைசா வரை உயர்த்தப்பட்டு, ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில், இன்று (மே 23) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 91 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களுக்குள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மூன்றாவது விலை உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் இந்த விலை உயர்வு நேரடியாகப் எதிரொலித்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 பைசா உயர்த்தப்பட்டு, 98 ரூபாய் 64 பைசாவிலிருந்து 99 ரூபாய் 51 பைசாவாக அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 91 பைசா உயர்த்தப்பட்டு, 91 ரூபாய் 58 பைசாவிலிருந்து 92 ரூபாய் 49 பைசாவாக உயர்ந்துள்ளது.
கடந்த மே 15-ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வு முறையை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. அன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே 19 அன்று இரண்டாவது முறையாக 90 பைசா உயர்த்தப்பட்டது. தற்போது சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது உயர்வையும் சேர்த்து, கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு கிட்டத்தட்ட 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
[youtube-feed feed=1]