சென்னை: சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பில்லை என்பது இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 80 கி.மீ தொலைவில் உள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருவதால், பலத்த காற்று வீசி வருகிறதுகாற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும் என கூறி உள்ளது.
ஆனால் மாலை 4மணி முதல் சென்னையில் மழை மற்றும் காற்றின் தாக்கமும் குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை தொடர்பான வரைப்படத்தில், சென்னையில் நாளை முதல் மழை இருக்காது என்பதையே வெளிக்காட்டி உள்ளது.
இந்திய வானிலை மையம் தமிழகத்தின் வரைப்படம் பச்சை நிறத்தால் நிரம்பி காணப்படுகிறது. அதை பார்க்கும்போது சென்னை உள்பட தமிழகத்தில் இன்றுடன் மழை நின்றுவிடும் நாளை முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை இருக்க வாய்ப்பில்லை என்பதும், கோவை, குமரி, நீலகிரி மாவட்டங்கள் மஞ்சள் நிறத்தில் நிரப்பட்டுள்ளதால் அங்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதும் தெரிகிறது.