டெல்லி

தற்போதைய நாட்டு நிலையை கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடும் திட்டம் இல்லையென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டென்டுல்கர் நாளை மறுநாள் தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பதிவில், “கொண்டாட்டங்களுக்கு இது நேரமல்ல. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனாத் தடுப்பு பணிகளுக்காக தங்கள் வாழ்க்கையில் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் சேவையை போற்றி தலை தாழ்த்தி நன்றி கூறுவதோடு, எனது பிறந்தநாளை கொண்டாடுவதையும் தவிர்த்து விடுகிறேன்” என சச்சின் கூறியுள்ளார்.