சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை செய்ய கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு ஒரு நினைவிடம் கட்டப் போவதாக அறிவித்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை எம் எல் ரவி எபவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனவும் கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி இந்த நினைவிடம் அமைக்கப்பட் உள்ள்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு தரப்பில் ”மேல்முறையீட்டு காலத்தில் தீர்ப்பு வரும் முன்பே ஜெயலலைதா மரணம் அடைந்து விட்டதால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டு விட்டன. எனவே ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்னும் கொள்கை முடிவை அரசு எடுத்து இந்த நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விதிமுறைகள் எங்கும் மீறப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதை ஒட்டி உயர்நீதிமன்ற அமர்வு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. அத்துடன் ஜெயலலிதாவை குற்றவாளி என கருத முடியாது எனவும் தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது..

இதை எதிர்த்து எம் எஸ் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அளித்தார். உச்சநீதிமன்ற அமர்வு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவது அரசின் கொள்கை முடிவு எனவும் அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தீர்ப்பு அளித்து மேல் முறையிட்டு மனுவை ரத்து செய்துள்ளது.