சென்னை: சென்னையில் உள்ள  புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சிறைக் கேண்டீனில் இருந்து மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கிய  விஜிலென்ஸ் தலைமைக் காவலரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல்,  பணியிட மாற்றம் செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புழல் சிறைத் துறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேஷ். இவர் புழல் மத்தியச் சிறையின் இரண்டாவது விஜிலென்ஸ் பிரிவில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.   இவர் தனது அதிகாரித்தின் மூலம்,  புழல் சிறையில் இருக்கக்கூடிய கேண்டீனில் மாதந்தோறும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி வந்துள்ளது, சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் போது தெரிய வந்தது.

விஜிலன்ஸ் அதிகாரி ராஜேஸ், பணத்தை கையில் வாங்காமல், மாதம் மாதம் ஜிபே மூலம் லஞ்சம் பெற்றது உறுதியானது.  இதுதொடர்பாக சிறைத் துறை அதிகாரிகள்  மேற்கொண்ட விசாரணையின் போது, தலைமைக் காவலர் ராஜேஷ் வங்கிக் கணக்கை சோதனையில் ஊர்ஜிதப்பஈடுத்தப்பட்டது. மேலும் விசாரணையில், ராஜேஸ்,  கேண்டீனில் இருந்து ஜிபே மூலம் பணம் பெற்றதும், மேலும் சில கைதிகளின் உறவினர்கள் அவருக்கு பணம் அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல்,  அவரை  உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளனர். இதுவரை, புழல் சிறை 2-ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த தலைமைக் காவலர் ராஜேஷ், சிறை 1-க்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண லஞ்சத்துக்கே கைது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, விஜிலன்ஸ் அதிகாரியே லஞ்சம் பெற்றது உறுதியான நிலையிலும், அவரை கைது செய்யாமல் பணியிற்ற மாற்றம் செய்தது, காவல்துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ராஜேஸ்மீது,   துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ழல் சிறை விஜிலென்ஸ் தலைமைக் காவலர், சிறை கேண்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.