நெய்வேலி: நெய்வேலி பாய்லர் வெடித்த விபத்தில் முதன்மை பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நெய்வேலி என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.