அருண் விஜய் நடித்த தடம் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் மென்டல் மதிலோ, சித்ரலஹரி ஆகிய படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனம் பெற்ற நிவேதா தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த நிலையில், அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
நிவேதா தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் சங்கத் தமிழன் படத்திலும் ஜகஜால கில்லாடி படத்திலும் நடித்துவருகிறார்.