நடிகை நிவேதா பெத்துராஜ், உணவகம் ஒன்றின் மீது தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்திலும் நிவேதா பெத்துராஜ் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
அதில், ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும், சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா பெத்துராஜ் இணைத்துள்ளார்.
ஸ்விக்கி நிறுவனம் மற்றும் உணவங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி , தரமாக இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவது ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி செய்துவரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.