சென்னை: நிவர் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வேளச்சேரியின் பல பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளை துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று அதி தீவிர புயலாக மாறிய நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது.

முன்னதாக கடந்த இரு நாட்களாக பெய்து வந்தகனமழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு தீவு போல காட்சி அளித்தன. சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வேளச்சேரி பகுதி ஏற்கனவே சதுப்புநில பகுதி என்பதால், அங்கு மழைநீர் தேங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அதன்படி, கடந்த இரு நாட்கள் பெய்த மழை காரணமாக, வேளச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரில் கார்கள் பழுதடையாமல் தடுக்க, ரயில்வே மேம்பாலத்தின் மீது இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராம்நகர் உள்பட பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளன. வேளச்சேரி பேருந்து நிலையம்உள்பட பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், மழைநீரை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் தரைதளத்தில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
கந்தன்சாவடி, தரமணி, பள்ளிக்கரனை உள்பட பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. அநத் பகுதிகளில் துணைமுதல்வர் ஓபிஎஸ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து வருகிறார். தேங்கிய மழைநீரை அகற்ற மாநராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.