பிஹார்:
பிஹார் 2020 தேர்தலே தனது கடைசி தேர்தல் என்று பிஹார் மாநிலம் பூர்ணியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டுகட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிஹார் மக்கள் வேலைக்காக செல்வது, தொழில் வாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்காதது, ஊழலை தடுக்காதது உள்ளிட்டவைகள் குறித்தும் நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடி வருவதுடன், தான் வெற்றி பெற்றால் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்றும் தேஜஸ்வி யாதவ் உறுதி அளித்துள்ளார். ஆனால், அதனை அவரால் நிறைவேற்ற முடியாது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பிஹார் 2020 தேர்தலே தனது கடைசி தேர்தல் என்று பிஹார் மாநிலம் பூர்ணியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்