டில்லி:

த்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது திடீரென அவர் மயங்கி சரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 2 முறை இதுபோன்று நிகழ்ச்சியின் போது மயங்கமடைந்துள்ள நிதின் கட்கரி தற்போது 3வது முறையாக மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து,  இறுதியில் தேசிய கீதம் இசைக்கும்போது, மேடையில் எழுந்து நின்ற நிதின் கட்கரி திடீரென மயக்கம் ஏற்பட்டு சாய்ந்து இருக்கையில் அமர்ந்தார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவருக்கு உதவி செய்தனர். உடடினயாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு  முதலுதவி செய்யப்பட்டது.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிதின் கட்கரிக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, திடீரென  மயக்கமடைந்தார். அதுபோலவே கடந்த மே மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோதும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது சாய்ந்தார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சி முடியும் சமயத்தில் அவர் 3வது முறையாக மயங்கி விழுந்தார்.