லக்னோ

த்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக நிதின் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்,

உத்தரப்பிரதேச மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. நேற்று  சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது.  துணை சபாநாயகர் பதைவ் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவது வழக்கமாகும்,  கடந்த 14 ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாத நிலையில் நேற்று நடந்துள்ளது.

இதில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில் நரேந்திர வர்மா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக ஆதரவாளரான நிதின் அகர்வால் போட்டியிட்டார்.  நிதின் அகர்வால் முன்னாள் மாநில அமைச்சர் நரேஷ் அகர்வால் மகன் ஆவார்.  இவர் ஹர்டோய் தொகுதியில் இருந்து சமாஜ்வாதி கட்சி சார்பில் வெற்றி பெற்று தற்போது பாஜகவுக்கு ஆதரவாக உள்ளார்.

நேற்று நடந்த துணை சபாநாயகர் தேர்தலில் மொத்தம் 386 வாக்குகள் பதிவாகி இதில் 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.   நிதின் அகர்வால் 304 வாக்குகளும் நரேந்திர வர்மா 60 வாக்குகளும் பெற்றார்.  இதையொட்டி நிதின் அகர்வால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்தலைப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளனர்.