சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் பலரும் தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஹோம் டூர், Vlog போன்ற வீடியோக்களை அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பாடகி நித்யஸ்ரீ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற பல மொழி பாடல்களை ஒன்றாக இணைந்து, காரில் சென்றபடியே பாடிச்செல்லும் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார் .

இந்த வீடியோ 76 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தமிழின் ‘கதைப்போமா’ பாடலில் தொடங்கி மற்ற மொழி பாடல்களையும் இத்தொகுப்பில் அவர் பாடியுள்ளார். அதோடு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடலும் அதில் இடம்பெற்றுள்ளது.

விஜய் டிவி-யில் சூப்பர் சிங்கரில் ஆரம்பமான நித்யஸ்ரீ, வட இந்தியா வரையிலான பல போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்றிருக்கிறார்.