பெங்களூர்:

பெண் சம்மதத்துடன் தான் பாலியல் உறவு கொண்டதாக நீதிமன்றத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அருகே ராமநகரத்தில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் புகார் கூறினார். அந்த பெண் சில ஆண்டுகள் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆன்மீக பேரின்பம் என்ற பெயரில் தன்னை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். ராமநகரம் போலீசார் வழ க்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2014ம் ஆண்டுல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என்பது தெரியவந்தது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ராமநகரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் நாகேஷ் வாதிடுகையில், ‘‘நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியுள்ள அந்த பெண் ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார்.

ஆன்மீக பேரின்பத்துக்காக விருப்பப்பட்டுத்தான் நித்யானந்தாவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார். இது பாலியல் பலாத்காரம் கிடையாது. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது பாலி
யல் பலாத்காரம் இல்லை’’என்றார்.