திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் நித்யானந்தா எதிரி அழிப்பு பூஜை செய்தார்.
பெங்களூரு பிடதி ஆசிரமத் தலைவர் நித்யானந்தா. இவரை மதுரை ஆதினமாக அறிவித்து அந்த அறிவிப்பு பின் திரும்பப் பெறப்பட்டது. அதை ஒட்டி நித்யானந்தாவுக்கு மதுரை ஆதின மடத்துக்கு சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இவருக்கு எதிராக பல வழக்குகள் பெங்களூருவில் நிலுவையில் உள்ளது.
பலவிதத்திலும் தனக்கு பாதகமான சூழல் நிலவுவதால் நித்யானந்தா சத்ரு சம்ஹார பூஜை என்னும் எதிரி அழிப்பு பூஜை செய்ய தீர்மானித்தார். அதை ஒட்டி அவர் தனது சீடர்களுடன் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சாமி தரிசனத்துக்குப் பின் அவர் சூரசம்ஹார மூர்த்தி சன்னிதியில் சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துக் கொண்டார்.
அவருக்காக சிறப்பு யாகமும் பூஜையும் நடைபெற்றது. அபிஷேகம், தீபாராதானையும் விசேஷமாக நடத்தப்பட்டது. நித்யானனந்தாவை காண அங்கு கூட்டம் பெருமளவில் திரண்டது. அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு உண்டாகியது. பிறகு காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.