டிகை நித்யா மேனனுக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லை. வரும் பட வாய்ப் புகளையும் தனக்கு பிடித்திருந் தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். உடல் பருமன் அதிகம் ஆன நிலையில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக பேசப்படுகிறது. இது நித்யா மனதை வருத்தப்பட வைத்தது.

இது குறித்து அவர் கூறும்போது.’நான் குண்டாக இருக்கிறேன் என்று எழுதுகி றார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் வாகு உண்டு. சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருப்பார் கள். இன்னும் சிலர் அளவாக சாப்பிட் டாலும் குண்டாக இருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதில்லை எனக்கு பிடித்த வேலையை செய்கிறேன். அதில் எனது திறமை நிரூபிக்கிறேன். அடுத்து பிரீத்: இன் டு தி ஷேடோஸ் வெப் தொடரில் நடிக்கிறேன். இது முற்றிலும் புதுமையான களம். இதற்கு முன் முயற்சித்து பார்த்தது இல்லை. இதை பார்ப்பவர்களுக்கு தங்களுக்குள் நேர்ந்த அனுபவம் போல் உணர்வார்கள் என்றார் நித்யா மேனன்.
கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டலின் நடித்த சைகோ படத்தில் நடித்த நித்யா மேனன் தற்போது மலையாளத்தில் கொலாம்பி என்ற படத்தில் நடிக்கிறார். விரைவில் சொந்தமாக படம் இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார்.