சங்க் இல்லா இந்தியா அமைக்க ஒன்றிணைவோம்: நிதிஷ்குமார் அறைகூவல்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

சனிக்கிழமையன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் “ஜனநாயகத்தைக் காப்பாற்ற” ஒரு ‘சங்-முக்த்’ (சங்-இல்லாத) நாட்டை உருவாக்க வேண்டுமென்று பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
Nitish kumar featured
பிரதமர் நரேந்திர மோடியின் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ கோஷத்திற்கு எதிராக நிதிஷ்குமாரின் முறையீடு தாக்குதல் வந்திருக்கிறது.
சங் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடி வர வேண்டும்,” என்று புதிய ஐ.ஜ.த தலைவர் நிதிஷ் குமார் பாட்னாவில் நடைபெற்ற ‘அனுகூல மாநாட்டில்’ கூறினார்.
மதச்சார்பற்ற கட்சிகள் மத்தியில் பேசும் போது  நிதிஷ்குமார், “பாஜவிற்கும் அதன் பிரிவினை சித்தாந்தத்திற்கு எதிராகவும் ஒன்றிணைவது தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் ஒரே வழி.  இது பெரிய அளவில் சாத்தியமான ஒற்றுமை” . எனக் கூறினார்.
முதல்வர் தாம் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ எதிராக இல்லை எனவும், ஆனால் பாஜகவின் கொள்கை சித்தாந்தமான சங்கின் “பிரிவினை” சித்தாந்தத்திற்கு எதிராக உள்ளார் என்றும் கூறினார். “பாரதிய ஜனதா கட்சியின் மூன்று பிரபலங்களான – அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி – கட்சிக்குள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் மதச்சார்பின்மை மற்றும் வகுப்பு ஒற்றுமையில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,” அவர் கூறினார்.
ஐ.ஜ.த தலைவர் பொறுப்பேற்றதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 11-ம் தேதி அன்று, 2019 பொதுத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் வட்டார கட்சிகளை ஒன்று திரட்டி பாஜகவிற்கு எதிராக “பெரிய அளவில் ஒற்றுமைக்கு” போராடுவேன் என்று நிதிஷ்குமார் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு வெளிப்படையான தாக்குதலில், “நிகழ்ச்சி மேலாண்மையை விட மேலாண்மை மிக முக்கியமானது” என்று நிதிஷ்குமார் கூறினார். “நிகழ்வு மேலாண்மை சிறிது காலத்திற்கு நன்மை செய்ய முடியும். ஆனால், பிரச்சினையின் ஆழத்திற்குப் போக வேண்டியது அவசியம். மக்களின் நலனுக்காக செய்யும் பாசாங்கற்ற வேலையே மக்களைச் சென்றடையும்”, என்று அவர் கூறினார்.
பீகாரில் மதுவிலக்கு (ஏப்ரல் 5 அன்று மதுபானம் மொத்தமாக தடை செய்யப்பட்டது ) பற்றிக் குறிப்பிட்ட அவர், “நான் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளேன் . பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட அதற்காக மகிழ்ச்சியடைவதைக் கண்டேன்”, என்றார்.
ஏழை மாணவர்கள் உயர் கல்வி கற்க உதவுவதற்கு, தனது அரசாங்கம் இந்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி வட்டியில்லா கல்விக் கடன் கொடுக்க ‘மாணவர் கடன் அட்டை’ வழங்கப் போவதாக முதல்வர் கூறினார். தமது அரசாங்கம் மகளிர் மேம்பாட்டிற்காக கவனம் செலுத்துவதாகவும் மற்றும் அவர்களுக்கு அரசு வேலைகளில் 35 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடையப் பதிவுகள்:
பீகாரில் மதுவிலக்கு அமல்
பீகாரில் பூரண மதுவிலக்கு
பீகாரில் பெண்கள் மகிழ்ச்சி
கள்ளச் சாராயம் கனஜோர்: பீகார் மதுவிலக்கு எதிரொலி

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article