ஹிந்தி பட இயக்குனர் ஹேமந்த் மாதுகர் இயக்கத்தில் மாதவன் அனுஷ்கா ஷெட்டி இணையும் படம் ‘நிசப்தம்’.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் மாதவனின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரின் படி மாதவன் ஆண்டனி என்கிற இசைக் கலைஞராக நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.