சென்னை

தேர்தலில் திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் திமுக வெற்றி முகத்தில் உள்ளது.  சுமார் பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது.

இதையொட்டி திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் முதல்வ்ர் லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் எம்பி, மத்திய பாதுகாப்ப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

அவ்வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டரில், “தமிழக சடப்பேர்வை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முக ஸ்டாலின் ஆகிய உங்களுக்கு வாழ்த்து தெரிவ்க்கிறேன்.  இனி அறிவாலயம் மக்களுக்கு சேவை செய்யும் இடமாக அமையட்டும்” என ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதே பதிவில் தமிழிலும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.