சென்னை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி அவரது நண்பர் தங்க பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை குழு அமைத்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

துணை வேந்தர், அதிகாரிகள், நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்தது. இந்நிலையில் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார அவகாசம் வழங்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.