சென்னை:

கிண்டி தனியார் விடுதியில்  தங்கி உள்ள தெலுங்கான முதல்வர்  சந்திரசேகர ராவை, திமுக எம்.பி கனிமொழி சந்தித்து பேசினார்.

நேற்று சென்னை வந்த தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ், கோபாலபுரம் இல்லம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அதைத்தொடர்ந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.

அப்போது பாஜக, காங்கிரசை தவிர்த்து 3வது அணி அமைப்பது குறித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால், செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகரரவ் 3வது அணி அமைக்கும் திட்டம் இல்லை என்றும், மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உள்ளிட்டவை குறித்தும் பேசியதாக கூறினார். மேலும், இந்தியா  மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதை நோக்கியே தனது பயணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இநநிலையில், கிண்டி தனியார் விடுதியில் தங்கியுள்ள சந்திரசேகர ராவை, திமுக எம்.பி கனிமொழி இன்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, இது  மரியாதை நிமித்தமான  சந்திப்பு என்று கூறினார்.