மதுரை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரத்தில், விசாரணை வளையம் பெரிதாகிக் கொண்டே போகிறது. பேராசிரியர் முருகன், மற்றும் கருப்பசாமியிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,

இன்று மதுரை பல்கலைக்கழகத்தின் புத்தாக பயிற்சி  பேராசிரியை விஜயவாடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நிர்மலாதேவியுடன் புத்தாக்க பயிற்சியின்போது ஒரே அறையில் தங்கியிருந்த தூத்துக்குடி பேராசிரியையிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது விஜயாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள  உதவி பேராசிரியர் முருகனிடம் 4-ம் நாளாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்றது. ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் 3-ம் நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை விஜயாவிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

பல்கலைக் கழகத்தில் புத்தாக்க பயிற்சியின்போது நிர்மலாதேவிக்கு பேராசிரியை விஜயா பயிற்சியாளராக இருந்ததாக கூறப்படுகிறது.