ஸ்ரீவில்லிபுத்தூர்:

ருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 11ந்தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நிர்மாலா தேவி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவரது நண்பரும், உதவி பேராசிரியருமான முருகனை காவல்துறை யினர் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் 23ந்தேதி கைது செய்யப்பட்டார்.

பேராசிரியர் முருகன், காமராஜர் பல்கலையில் மேலாண்மை கல்வித்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். கைது செய்யப்பட்ட முருகன் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு  சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிபிசிஐடி விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட முருகன் மற்றும் மற்றொரு குற்றவாளியான கருப்பசாமி ஆகியோருக்கு வரும் 14ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில்,  முருகன் ஜாமீன் கோரி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையை வரும் 11ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது