சாத்தூர்:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், கைது செய்யப்பட்ட  பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பின்புலமாக செயல்பட்டு வந்த  மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த வந்த சிபிசிஐடி போலீசார், 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந் ததை தொடர்ந்து இன்று சாத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீதிபதி இல்லாததால், அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர்.

அங்கு, பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இவர்களிடம் கவர்னர் அமைத்துள்ள விசாரணை குழுவினர், ஓரிரு நாளில் சிறைச்சாலைக்கு சென்று விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.