
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மாணவிகளை தவறான வழிக்கு இழுக்க முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியையும், அவருக்கு உதவியாக இருந்த முருகன் என்ற பேராசிரியரையும் கைது செய்தனர். இதே வழக்கில் தொடர்புடையே ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை காவல்துறையினர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சற்று நேரத்துக்கு முன் மதுரை நீதிமன்றத்தில் இவர் சரணடைந்தார். அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel