விருதுநகர்:

ல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பண, பதவி ஆசை காட்டி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் பூதாகாரமாகி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் நிர்மலாதேவி பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலை யில், நிர்மலாதேவியிடம், மாணவிகளை அழைத்துவரச் சொன்னதாக சந்தேகிக்கப்படும்  பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட் டால், மாணவிகளை அழைத்து வர வற்புறுத்திய மேலிடம் யார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இப்பிரச்சினையில் விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவினர் நேற்று அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்று பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.