டெல்லி:
குற்றவாளிகளுக்கு. சோனியா காந்தி அளித்ததுபோல, மன்னிப்பு அளியுங்கள் என்று கோரிக்கை விடுத்த மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங்கின் கோரிக்கைக்கு, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி பதில் தெரிவித்து உள்ளார். அப்போது, தனது அன்புமக்ள் நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டூ மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்து தூக்கி வீசப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரமான குற்ற வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடும் பிரபல மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், இவர், சமீபத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு சோனியா காந்தி பொது மன்னிப்பு வழங்கியது போல, நிர்பயாவின் தாயாரும், நிர்பயா குற்றவாளிகளை மன்னித்துவிடலாம் என்று யோசனை தெரிவித்திருந்தார்.
வழக்கறிஞரின் இந்திரா ஜெயசிங்கின் யோசனைக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
எனக்கு இதுபோன்ற ஒரு யோசனையைக் கூற இந்திரா ஜெய்சிங் யார்? நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றுதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நினைக்கிறார்கள். ஆனால், இவரைப் போன்ற ஒரு சிலரால்தான், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்டம் மூலம் நியாயம் கிடைக்காமல் போகிறது என்று கடுமையாக சாடினார்.
இந்திரா ஜெய்சிங் எப்படி இப்படி பரிந்துரைக்கத் துணிந்தார் என்பதை நம்ப முடியவில்லை. பல ஆண்டுகளாக நான் அவரை உச்சநீதிமன்றத்தில் பார்த்து வருகிறேன்… ஆனால், அவர் , ஒரு முறைகூட என்னிடம் இதுகுறித்து பேசியதில்லை..இன்று அவர் குற்றவாளி களுக்காகப் பேசுகிறார்…. கற்பழிப்பாளர்களை ஆதரிப்பதன் மூலம் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கிறாள், இப்படிப் போன்றவர்களால் நாட்டில் பாலியல் சம்பவங்கள் நிறுத்தப்படாது.
தனது அன்புமகள் நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும், குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று முழு நாடு விரும்புகிறது. இவர்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் , பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதில்லை என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.