லக்னோ: உ.பி.யில் நிர்பயா கொலையைப்போல பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை படுகொலை கொடூரமாக அரங்கேறி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதுன் மாவட்டத்தில் இந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. சுமார் 50வயது மதிக்கத்தக்க அந்த பெண் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் ஒரு கும்பத்தில் கடத்திச்சென்று, காட்டுப்பகுதியில் கைது பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை கொடூரமாக தாக்கியதாகவும். இதில் அவரது இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்தன. பின்னர் அவரது பிறப்புறுப்பில் கம்பியால் சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கோவிலுக்கு சென்ற பெண் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடினார்கள். அப்போது அந்த பெண், காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடலை பெண் டாக்டர் உள்பட 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது.
குற்றவாளிகளை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது உள்ளதாக கூறிய காவல்துறை அதிகாரி, விசாரணையில், அந்தப்பகுதியைச் சேர்ந்த மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம், டிரைவர் ஜெயபால் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொடூரமான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் ‘நிர்பயா’ கொலையை நினைவுபடுத்தும வகையில் உள்ளன.
இந்த கொலை விவகாரத்தில், அந்த பெண்ணின் உடல் 18 மணி நேரம் கழித்தே பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக, அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கையின்படி, அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்தார் என்றும், அதனால் . கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது. கனமான பொருளால் அவரது நெஞ்சு பகுதி தாக்கப்பட்டு, நுரையீரல் சேதமடைந்துள்ளது. அந்த பெண்ணின் விலா எலும்பு மற்றும் கால் உடைந்தது. இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.