‘ஓ மை கடவுளே’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார் அசோக் செல்வன். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் இந்தப் படம் தயாராகி வந்தது.
இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இந்தப் படத்தினை இயக்கி வருகிறார்.


நின்னிலா நின்னிலா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக திவாகர் மணி, இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன், பாடலாசிரியராக ஸ்ரீமணி, எடிட்டராக நிவின் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

[youtube-feed feed=1]