சென்னை:
சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருந்தார்.
அதன்படி இன்று இன்று முதல் சென்னையில் வீடு வீடாக சென்று நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பரவி வரும் டெங்கு போன்ற மர்ம காய்ச்சல்களை குணப்படுத்தும் பொருட்டு, நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு வீடு வீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிலவேம்பு குடிநீர் கொண்டு செல்லும் வாகனங்களுடன் மருத்துவரும் உடன் செல்வார்கள். முடிந்த வரை இன்று மூன்று நாளைக்குள் 50,000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.