அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர் , நீலகிரி

குளிர்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியை ஆங்கிலேயர்கள் திருத்திய போது, இது சிறிய ஊராக இருந்தது. எனவே இதை குன்னூர் என அழைத்தனர். குன்னூர் என்றால் சிறிய ஊர் எனப் பொருள்படும். அம்பாளுக்குக் கோயில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் தந்திக்கம்பம் ஒன்றினை இவ்விடத்தில் நட்டனர்.

இதனால், இங்கிருக்கும் அம்பாள் ஆதியில் தந்தி மாரியம்மன் என்ற திருப்பெயரில் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. இன்று வரையிலும் கோயிலுக்கு அருகே ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தந்திக் கம்பம் உள்ளது.

அம்மனுக்குப் பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை நடத்தப்படுகிறது. குன்னூரில்   தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது தந்தி மாரியம்மனை மனமுருகி வணங்கிட மழை பெய்யும் என்கின்றனர்.