சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு மற்றும் ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலை பறிபொய் விடும் என்ற அச்சசத்தில் சொந்த ஊா்களுக்கு செல்ல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களைச் சோந்தவா்கள் குடும்பம் குடும்பதாக குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. தற்போது இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இதனால், பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள வடமாநிலங்களைச் சோந்த தொழிலாளா்கள் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனா். இதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வடமாநிலத்தைச் சோந்தவா்கள் குவிந்து வருகின்றனர். ரயிலில் செல்ல முன்பதிவு கட்டாயம் என்பதால், சென்ட்ரல் ரயில்நிலையத்தின் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்காக டிக்கெட் கவுன்ட்டா்களில் நீண்ட வரிசையில் அவா்கள் காத்திருந்தனா்.
எழும்பூா் ரயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பலர் முன்பதிவு செய்துவிட்டு, ரயில்களுக்காக காத்திருக்கின்றனர். ஏராளமானோர் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அதிகரித்து வரும் கூட்டம் காரணமாக சென்ட்ரலில் தொற்று பரவலுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அவர்களை முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் ரயில்வே போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். வடமாநிலங்களைச் சோந்தவா்கள் வந்தனா். அவா்களுக்கு ரயில்வே போலீஸாா் அறிவுரை வழங்கினா்.
ஏராளமானோர் ரயிலில் இடம் கிடைக்காமல் காத்திருப்பதால், தங்களது முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர். இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வேலை வாய்ப்பு பறிபோகும் அச்சத்தால் சொந்த ஊர் செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். கோவையில் இருந்து பீகார் மாநிலம் தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.