டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழகஅரசின் கோரிக்கையை ஏற்று, மத்தியஅரசு மேலும் தடுப்பூசிகளை இன்று அனுப்பி வைக்கிறது.

அதன்படி புனேயில் இருந்து இன்று 6 லட்சம் தடுப்பூசி மருந்துகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் வைக்கப்பட்டு பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மத்திய அரசிடமிருந்து ஏற்கனவே 15 லட்சம் ஒதுக்கீடு கோவிஷீட்ல் தடுப்பூசி டோஸ்கள் கோரப்பட்டு வந்த நிலையில் தற்போது 2வது கட்டமாக 6லட்சம் தடுப்பூசி டோஸ்கள் சென்னைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.