நைஜீரியா : ஆறு வயதில் உலகின் மிக அழான சிறுமி புகழ் பெற்ற ஜேர்

Must read

லாகோஸ், நைஜீரியா

நைஜிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஜேர் தனது புகைப்படங்கள் மூலம் உலகின் அழகான சிறுமி என்னும் புகழை பெற்றுள்ளார்.

நைஜீரிய நாட்டில் லாகோஸ் நகரை சேர்ந்த திருமண புகைப்படக்காரர் மோஃப் பாமுயிவா என்பவர் மிகவும் புகழ் பெற்றவர் ஆவார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்களுக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. பாமுயிவா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்த புகைப்படங்கள் உலகெங்கும் பிரபலம் ஆகியது.

அவர் ஆறு வயது சிறுமி ஒருவரின் புகைப்படங்களை தனியாகவும் அந்தப் பெண்ணின் சகோதரிகளுடனும் பதிந்திருந்தார். இந்த புகைப்படத்தில் இருந்த ஜேர் என்னும் அந்தப் பெண்ணின் முகம் பலரையும் கவர்ந்துள்ளது. பலரும் அந்த பெண்ணின் கண்களுக்கு ரசிகர்கள் ஆகி உள்ளனர். லட்சக்கணக்கில் லைக் பெற்றுள்ள அந்த புகைப்படத்தில் அந்த சிறுமியை உலகின் மிக அழகான பெண் என பலர் வர்ணித்துள்ளனர்.

இது குறித்து பாமுயிவா, “நான் நைஜீரியா உள்ளிட்ட பல ஆப்ரிக்க நாட்டவரின் புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளேன். அப்போதெல்லாம் அந்த மக்களின் பலவீனத்தை தேடி புகைப்படம் எடுத்து நான் எனது புகழை பலப்படுத்தினேன். ஆனால் தற்போது ஜேர் என்னும் இந்த சிறுமியின் பலத்தை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன். இவர் பெரிய பெண்ணான பிறகும் இவ்ரை பற்றி இந்த புகைப்படம் பேசும்.

நான் பல வருடங்களாக புகைப்படக் கருவியை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் எனது புகைப்படத்துக்கு இவ்வளவு குறைந்த நேரத்தில் இத்தனை புகழ் கிடைத்ததிலை. இதற்காக நான் மக்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த புகழை வாங்கித் தந்த ஜேர் ஒரு தேவதை” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article