இஸ்லமாபாத்:

உடல்நிலை பாதிப்பின் காரணமாக ஜாமீனில் விடுவிக்க கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.


பாகிஸ்தானின் பிரதமராக இருந்தபோது, அல்-அஜீஜியா இரும்பாலையில் ஊழல் செய்ததாக நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து நவாஸ் ஷெரீப் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் அவருக்கு 4 முறை மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது மகள் மர்யாம் நஜாஸ் கூறியிருந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு போதிய மருத்துவ வசதிகளை பிரதமர் இம்ரான்கான் அரசு செய்யவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, ஜாமீனில் விடுவிக்கக் கோரி நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஆஷிப் சயீத் கோஷா மற்றும் நீதிபதிகள் சஜ்ஜாத் அலி ஷா, யாஷா அஃப்ரிதி ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.