இந்த ஆண்டிற்கான சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயம் துபாயில் நடைபெற்றது. 21 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் இறுதிசுற்று, ‘அபுதாபி கிராண்ட்ப்ரீ’ என்ற பெயரில் அபுதாபியில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் ரோஸ்பெர்க் 1 மணி, 38 நிமிடம், 4.452 விநாடிகளில் 2-ஆவது வீரராக இலக்கை எட்டினார். இருப்பினும் 385 புள்ளிகள் பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 1மணி நேரம் 38 நிமிடம் 4.013 வினாடிகளில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்ததார். ஆனால், ரோஸ்பெர்க் 12 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தார். மேலும்,. ரோஸ்பெர்க் முதல் 3 இடங்களுக்குள் வராமல் இருந்து, ஹாமில்டன் முதலிடம் பிடித்தால் மட்டுமே சாம்பியன் பட்டம் வெல்ல முடியும். எனவே, ரோஸ்பெர்க் 2-ஆவது இடத்தைப் பிடித்ததால் ஹாமில்டனின் சாம்பியன் வாய்ப்பு கனவாய் போனது.
ரோஸ்பெர்க்கின் தந்தை இதற்கு முன்னர் இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். எனவே தந்தை, மகன் ஒரே போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளனர்.