சான் சால்வடார்

இன்று சான் சால்வடாரில் நடந்த போட்டியில் நிராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இன்று எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் இன்று  72 வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. போட்டியில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உள்ளிட்ட சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் நிகரகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்குள் நுழைந்தனர். இந்த போட்டியில் இந்தியப் போட்டியாளர் ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்குத் தகுதி பெற்று முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்தும் நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு அவரால் முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.

போட்டியில் நிகரகுவா நாட்டைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றி பெற்று 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்காவின் கேப்ரியல் அவருக்கு  முடிசூட்டினார். போட்டியில் குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த மிஷேல் கான் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கமிலா ஆகியோர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற திருமணமான பெண்கள் ஆவர்.