சென்னை

மிழகத்தில் சென்னை,கோவை திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு  முகமை சோதனை நடத்தி வருகிறது.

பிறநாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனர் என தொடர்ந்து புகார் எழுந்தாளது  இன்று இந்த  சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை  சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித், காளப்பட்டியில் உள்ள முருகன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது, திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுப் பதுங்கி இருக்கும் நபர்களைத் தேடும் பணியில் என்ஐஏ ஈடுபட்டது. மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ, சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.