திருச்சி:
ஐஎஸ்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவரது வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அருகே உள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியில், செல்போன் கடை நடத்தி வரும் சர்புதீன் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவரது உறவினரான ஜாபர் ஆகியோர் அல்கொய்தா பயங்கரவாத தாக்குதலுக்கு சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக அவர்களின் கருத்துக்கள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துவந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் அவர்களின் வீட்டிற்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கேரளாவை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஜார்ஜ் தலைமையில் 6க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சர்புதீன், ஜாபர் ஆகியோரின் லேப்டாப், செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]