சென்னை:
கொழும்பு ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். இன்று சென்னை, நாகை மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்க உள்பட 9 இடங்களில் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில், 259 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் தமிழ்நாட்டில்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இங்கு சரியான சூழ்நிலை அமையாத நிலையில், இலங்கையில் தங்களது கோர முகத்தை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே சென்னை, கோவை போன்ற பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ள நிலையில், இன்று திருச்சி, சென்னையில் உள்ள சிலரது வீட்டில் சோதைனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். மணலி லிங்கிசெட்டி தெருவில் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற புதிய அமைப்பு ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்துக்கு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அதையடுத்து, அந்த அமைப்பின் மாநில தலைவர் சையது முகமது புகாரி என்பரின் வேப்பேரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா? என்று தெரியவில்லை.
இதற்கிடையே நாகையில் சிக்கல், மஞ்சகொல்லை ஆகிய இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அசன்அலி, ஹாரீஸ்முகமது ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புக்கும் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலும் இன்றைய சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.