தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு : ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் கைது

Must read

ம்பூர்

ம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒருவர் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.  டில்லியில் உள்ள மத்திய உளவுத்துறையினர்  இந்த உரையாடல்களைக் கண்காணித்து செல்போன்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அன்சார் என்பவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இது குறித்து சென்னையில் உள்ள உளவுத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.. சென்னையில் இருந்து உளவுத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு, வேலூர், திருப்பத்தூர், திருச்சி நகரங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் உளவுத்துறை காவல்துறையினர் என 16-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்பூருக்கு வந்தனர்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டை அவர்கள் சுற்றி வளைத்தனர். பிறகு வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவன் அன்சார் அலியைப் பிடித்து அவரை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆற்காடு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.   அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளைப் பார்ப்பதற்காகச் சென்னையில் இருந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தனர்.

அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பதிவுகளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு தெரிவித்து பதிலுக்கு இவரும் பதிவு செய்ததாகத் தெரியவந்தது.. சுமார் 12 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.  மாணவர் கைது செய்யப்பட்ட. சம்பவத்தால் ஆம்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

More articles

Latest article