to
 வழிபாட்டுத்தலங்கள்,  பள்ளிகள் போன்றவை இருக்கும் இடத்தில் இருந்து  500 மீட்டர் தொலைவில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை  2013 ஆண்டு மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது.  ஆனால், அவை முறையாக பின்பற்றப்படவில்லை என  பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைப்பது குறித்தும், அரசின் நிபந்தனைகளில் தெளிவான விளக்கங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து , மத்திய சுகாதார துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் ஆகியவை இரண்டு  வாரங்களில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.