Skip to content
  • Sat. Sep 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

என்ஜிஓக்களுக்கு கிடுக்கிப்பிடி! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது மத்திய அரசு

Nov 12, 2020

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து  நிதி பெற விரும்பும் என்ஜிஓக்களுக்கு மத்தியஅரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் மட்டுமே நிதிஉதவி பெற முடியுங்ம என புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

மதசம்பந்தமான பல்வேறு என்ஜிஓ-க்கள் கல்வி, ஆன்மீகம், சமூக சேவை என வெளிநாடுகளில் நிதி பெற்று இந்தியாவில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இந்த நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து நிதிபெறுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் தற்போது மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.
அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது .

வெளிநாட்டிலிருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்திற்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடித்தை சமர்பிக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் 
அதேபோல வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க கூடிய நிறுவனங்கள், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Post navigation

பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பு… மக்களின் மனநிலை மாறுகிறதா?
சிராக் பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் லாலுவின் இரு மகன்களும் தோற்று இருப்பார்கள்…

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer